Wednesday, May 21, 2014

தமிழனின் திமிரும் அகந்தையும் தலைகாட்டும் தருணங்கள்!

பொதுவாக தமிழர்கள் என்றாலே மற்றவர்களிடம் ஒரு "மட்டமான ரெப்யூட்டேஷன்" உண்டு. இது பொதுவாக பிற மாநிலங்களில் வாழாத தமிழர்களுக்கு தெரியாது. பிற மாநிலத்தவர்கள் உங்களைப் பற்றி நீங்கள் அருகிலில்லாதபோது என்ன பேசுகிறார்கள் என்று ஒரு சில பிற மாநில நண்பர்களிடம் அல்லது தோழிகளிடம் விசாரித்துப் பார்த்தால் உங்களுக்குப் புரியும்.

பொதுவாக தமிழர்களிடம் உள்ள அந்தத் திமிர் அல்லது அகந்தை எல்லோரிடமும் அல்லது எல்லா நேரங்களிலும்  தலைகாட்டாது. தமிழர்கள் என்றால் பொதுவாக திருக்குறள் பேசிக்கொண்டு ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் எல்லாம் பேசிக்கொண்டு , கண்ணதாசன் பாடல்களைப் பாடி தத்துவங்கள் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள் .

தனக்கு ஒண்ணுமே  தெரியாது னு சொல்றவங்களையும் , தனக்கு நிகராக அவர்களை நினைப்பவர்களையும்கூட சரியாகப் புரிந்துகொண்டு அவர்களை தனனைப்போல்  மதிக்கவும் தெரிந்தவர்கள்தான் தமிழர்கள். தேவையே இல்லாமல் மற்றவரின் கொள்கைகளையோ, அறியாமையையோ, நம்பிக்கையையோ, ஏழ்மையையோ, இயலாமையையோ  ஏளனமாக இவர்கள்  பேசுவதில்லை!

ஆனால்...ஒரு சில நேரங்களில், ஒரு சிலருடன் இவர்கள் விவாதிக்கும்போது, ஒரு சிலருடைய "ஆட்டிட்டூட்" பிரச்சினைகளால்  ஏற்படும் விவாதம் விபரீதமாகி  நிற்கும். அது நிச்சயம் "ஈகோ- க்ளாஷ்" தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. அப்படி ஆகும்போது  விவாதம் தலை கால் தெரியாமல், கட்டுக்கடங்காமல் போவதுண்டுதான்!

அப்படி ஒரு சூழல் உருவாகும்போது விவாதம் நடக்கும் அந்தத்  தளம் நடத்துபவருக்கே என்ன செய்வதென்று தெரியாத ஒரு சூழல் உருவாகிவிடும். இதெல்லாம் தமிழ் இணையதளங்களில் காலங்காலமாக தமிழர்களுக்குள் நடப்பதுதான். புதிகாக ஒன்றும் உருவாகவில்லை!

பதிவர்களுக்குள் பிரச்சினையை எப்படி தீர்ப்பது? னு திரு தனபாலன் பதிவு போட்டு அனலைஸ் செய்துகொண்டு  இருக்கிறார்

இதையெல்லாம் தீர்ப்பது, அல்லது நடக்காமல் செய்வது என்பதெல்லாம் நடக்கிற காரியமா? என்னனு எனக்குத் தெரியவில்லை. மேலே உள்ள பதிவில் இதுபோல் பதிவர்கள் இடையில் வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு பற்றி  ஆராய்ச்சி பண்ணுகிறவர்கள், பொதுவாக விவாதங்களில் தலையிடாமல் நாகரீகமாக ஒதுங்கிக்கொள்ளத் தெரிந்தவர்கள். இவர்களை "சமர்த்து" என்று சொல்லலாம்தான். ஆனால் தமிழர்களில் பல வகை உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்! எல்லாத் தமிழர்களும் இவர்களைபோல் "பெரிய மனிதர்கள்" கெடையாது. இவர்களுக்கு இன்னொரு வகைத் தமிழர்களின் மனநிலை, "டெம்ப்பரமெண்ட்" எல்லாம் சரியாகப் புரிவதில்லை!

ஒரு சில தமிழர்களிடம் விவாதங்கள் எப்படியெல்லாம் கரை புரண்டு ஓடி, கடைசியில்  எப்படி நிற்கிறது என்று பார்க்க வேண்டுமென்றால்,

"ஏன் இப்படி!"   தளத்தில் உள்ள பதிவுகளுக்கான கீழே உள்ள தொடுப்புகளில் உள்ள பின்னூட்டங்களை (பதிவை அல்ல) வாசித்தால் தெரியும்..

தமிழனிடம் தூங்கிக்கொண்டு இருந்த  திமிரும் அகந்தையும் ஆணவமும் வெளிவரும் சில தருணங்கள் இருக்கின்றன! அப்படி ஆணவம் தலைத்தூக்கும் தருணங்கள் என்னவெல்லாம் என்று கீழே உள்ள பதிவுகளில் பின்னூட்டங்கள் படித்தால் உங்களுக்கு விளங்கலாம்.

கண்ணுக்கு புலப்படாத கலாச்சாரம், பண்பாடு: A template post

பூமி பாக்டீரியம் சொல்கிறது வேற்றுக் கிரகத்தில் உயிர் : GFAJ-1

இதுபோல் நடக்கும் விவாதங்களையெல்லாம் "விதண்டாவாதம்" "வேலையில்லாதவன் செய்வது" "வரட்டு கவுரவம்" என்று சொல்லலாம்தான். ஆனால் ஒரு சில நேரங்களில் பதிவுலகில் இவைகளை தவிர்க்க முடியாது. ஆமா, மேலே உள்ள விவாதத்தில்  யாரு ஜெயிச்சா?னு அப்பாவியாக கேள்வி கேட்காதீர்கள். இதுபோல் "நான் என்னும் அகங்காரம்" தலைதூக்கி கரை புரண்டு ஓடும் விவாதங்களில் வெற்றி,  தோல்வி என்பதெல்லாம் கெடையாது!

Disclaimer: இப்பதிவில் இடப்படும் பின்னூட்டங்கள் வெகு கவனமாக மட்டுறுத்தல் செய்யப்பட்டு வெளியிடப்படும்!

No comments: