Sunday, April 13, 2014

பெண்பதிவர்களை மிரட்டும் பதிவுலக மாஃபியாக்கள்!

"என்னைக்கேட்டால் பெண் நாட்டை ஆளனும், ஆண் வீட்டை ஆளனும்னு " மன்னன் படத்துல நம்ம விசயசாந்தி அக்கா சொல்வாங்க! இப்படி ஏதாவது திரைப்படத்துல அல்லது கதைகள்ல சொல்லி நம்ம ஆறுதலடஞ்சிக்க வேண்டியதுதான்! ஏன் நம்ம அம்மையாருதான் ஆண்டுட்டுட்டாங்களே? ஆண்டுக்கிட்டே இருக்காங்களே.. அது போதாதாங்கிறீங்களா? அதெல்லாம் சும்மா சினிமா மோகத்துல அலையிற தேசத்துல நடக்கிற சில அதிசயங்கள்! அதாவது நம்ம ராமன் நோபல் பரிசு வாங்கியது போல. நம்ம ராமானுசனை ஜீனியஸுனு உலகத்திலே எல்லாரும் ஒத்துக்கிட்டதுபோல. நம்ம ஏ ஆர் ரகுமான் ஆஸ்கர் வென்றதுபோல. இதெல்லாம் சாதனைகள் அல்ல! அதிசயங்கள்!

நம்ம சாதனைகளையும் அதிசயங்களையும் பிரித்துப்பார்க்க கத்துக்கனும். அதிசயங்களை சாதனைகள் கணக்கில் எடுக்கக்கூடாது! ராமனை மாதிரி இன்னும் ஒரு பத்து நோபல் பரிசாவது நம்ம வாங்கினால் நம்ம கொஞ்சம் அறிவியலில் சாதிச்சதா சொல்லிக்கலாம். அதெல்லாம் எங்கே நடக்க? ராமானுசம் போல பல கணித மேதைகள் வந்துகொண்டே இருந்தால் நம்ம மக்களின் சாதனைகளை/அறிவை மெச்சி பெருமையடையலாம்! ஏ ஆர் ரகுமான் போல பல இந்திய ஆஸ்கர் நாயகர்கள் உருவானால்? அப்போ அது அதிசயமில்லை. திறமைதான்! அப்போத்தான் நம்ம சாதிக்கிறோம்னு சொல்லலாம்.

தலைப்புக்கு வருவோம்!

 பெண்பதிவர்கள் நெறையா எழுதனும்னு டாக்டர் ருத்ரன் சொல்லிட்டாருனு, பெண் பதிவர் யாரும், எனக்கு எழுத வரும், நானும் எழுதுறேன் பாருங்கணு வாயை திறந்திடாதீங்க! இன்னொரு பெண் பதிவரைக்கூட தைரியமாக விமர்சனம் செய்திடாதீங்க! அதெல்லாம் சும்மா அவர் சொல்லிட்டுப் போராருனு ஃப்ரியா விடுங்க!

என்ன என்ன? அழகா சர்க்காஸ்டிக்கா எழுதுற எழுத்துத் திறமை இருக்கா? நீங்களே எழுதிப் படிச்சுக்கோங்க! இல்லைனா உங்க பதிவை எழுதி ஒரு சில தோழிகளுக்கு அனுப்புங்கள்! பதிவுலகில் நீங்க என்ன செய்யனும்னா,... ஒரு ஊர்ல ஒரு அம்மா அப்பா, கஷ்டப்பட்டாங்க, ஒரு தேவதை வந்து உதவுச்சு அப்புறம் சந்தோஷமாக வாழ்ந்தாங்கனு ஏதாவது கதை எழுதுங்க. ..

பின்னூட்டம்? சும்மா அட்டண்டன்ஸ் மட்டும் கொடுங்க! :-) "நல்லா எழுதுறீங்க!" "வாழ்த்துக்கள்" னு சொல்லுங்க! உங்களுக்கு அந்தப் பதிவரின் கருத்தில் நம்பிக்கை இல்லையா? அப்போ கஷ்டம்தான்! மனசுக்குள்ளேயே ஒரு பின்னூட்டமெழுதி நீங்களே வாசிச்சுக்கோங்க! அப்பறம் மறக்காம அதை கிழிச்சுப் போட்டுடுங்க!  அப்போத்தானே பல பதிவுலக சண்டியர்கள்ட்ட இருந்து நீங்க தப்பிக்க முடியும்?

என்ன இது அநியாயம்? இன்னொரு பெண் பதிவரைக்கூட நாங்கள் விமர்சிக்ககூடாதா? அதெல்லாம் செய்யக்கூடாதுங்க! அதெல்லாம் ஆண் பதிவுலக சண்டியர்கள் கண்ணுக்கு பட்டுச்சுனா? உங்களை மிரட்டுவார்கள்! எப்படி? ஏன் அந்த பதிவருடைய படத்தை போட்டீங்க? சட்டப்படி தப்பு தெரியுமா? அப்படி இப்படினு உங்களை மிரட்டி பதிவுபோட்டு பொழைப்பு நடத்துவார்கள்! ஏன் அந்தப் பதிவர் பின்னூட்டத்தில் அவங்க படத்தை எடுக்கச்சொல்லி உங்ககிட்ட கேட்டால் நீங்க ஒரு மன்னிப்புடன் அந்தப் படத்தில் ரிமூவ்ப்பண்ண மாட்டீங்கனு நம்புவானுக! ஆனால் இவனுக மட்டும் ரசினி ரசிகரா இருந்தாலும் கமலு ரசிகரான இன்னொரு சண்டியருடன் ஜால்ரா அடிப்பார்கள். இவனுக ஜெ ஜெ ஜால்ராவாக இருந்தாலும் இன்னொரு மு க விசிறியிடம் அனுசரிச்சுப்போவானுக! இவனுக யாருனு கேக்குறீங்களா? பதிவுலக மாஃபியாக்கள்!

அதனால பெண் பதிவர்கள் யாரும் இனிமேல் எந்தவிதமான மாற்றுக் கருத்தையும் சொல்லக்கூடாது. ஒண்ணுமட்டும் ஞாபகத்தில் வச்சுக்கோங்க! உங்களுக்கு துரோகிகள் ஆண்கள் மட்டுமில்லை! முதுகெலும்பில்லாத பல பெண் பதிவர்களும்கூட! இந்த சண்டியர்கள் மிரட்டல்களுக்கு ஜால்ரா அடிச்சு உங்களை உண்டு இல்லனு பண்ணிடுவாங்க!

அப்புறம் இன்னொண்ணு! நீங்க என்ன எழுதுறீங்க, உங்க தமிழின் அழகை, இலக்கணத்தை, கருத்தை எல்லாம் பார்க்க மாட்டார்கள்! உங்க சாதி என்னவாயிருக்கும்னு உங்க எழுத்தை வச்சு ஆராய்வார்கள்.

ஆக, இதுபோல ஆராச்சியில் கைதேர்ந்த இந்த பதிவுலக மாஃபியாக்கள் வாங்கி கொடுத்தாதான் நமக்கு அடுத்த நோபல் பரிசு கிடைக்கும்!

பின் குறிப்பு:

பதிவுகளும் எண்ணங்களும் காலத்தால் அழியாதவையா?

4 வருடங்களில் பதிவுலக சூழல்கள், பதிவரின் எண்ணங்கள் எப்படியெல்லாம் மாறுகிறது?  என்பதைப் புரிந்து கொள்ள இன்றைய பதிவுலக சூழலுக்கு சம்மந்தமே இல்லாத ஒரு மீள்பதிவு இது!

காலத்திற்கேற்ப என் சிந்தனைகள்/பதிவுலக சூழ்நிலை/பதிவர்கள் எப்படியெல்லாம் மாறுகிறது/மாறுகிறார்கள் என்று எனக்கே நான் காட்டிக் கொள்ள முயலும் ஒரு சிறு முயற்சி!

இதை எழுத வேண்டிய சூழலை உருவாக்கிய பின்னூட்டம் ஒண்ணு இங்கே!

*******************************

 ///***On Feb 13, 2010 9:15:00 PM , கிருபாநந்தினி said...
+ இந்தப் பதிவை ஆதரிச்சும் எதிர்த்தும் பின்னூட்டம் இட்டிருந்தவங்களோட அத்தனை பேரின் கருத்துக்களையும் இங்கே நான் பதிவு செஞ்சிருக்கேன். என்னை ‘முட்டாள்’னு சொன்ன ரோஷ்மாவின் பின்னூட்டத்தைக்கூட இங்கே பதிவிட்டிருக்கேன். ஆனா, பத்துப் பன்னிரண்டு பேரோட பின்னூட்டங்களை மட்டும் பதிவு செய்யாம ஒதுக்கிட்டேன். அதுக்குக் காரணம், அவங்க என்னைத் தாக்கி ரொம்பக் கடுமையா எழுதியிருந்தது இல்லே; ரொம்ப ஆபாசமா, ரொம்ப வக்கிரமா தங்களோட எதிர்ப்பைத் தெரிவிச்சிருந்ததுதான். இதுவரைக்கும் நான், கெட்ட வார்த்தைகளை ஏதோ படிக்காத பாமரர்கள்தான், மிக அடித்தட்டு மக்கள்தான் பயன்படுத்தி ஒருத்தருக்கொருத்தர் வசைமாரிப் பொழிவாங்கன்னு நினைச்சிருந்தேன். ஆனா, கெட்ட வார்த்தையைப் பயன்படுத்திப் பண்பாடு இல்லாம திட்டுறவங்க நல்லாப் படிச்ச, இணைய தளத்தைப் பயன்படுத்திப் பின்னூட்டம் இடத் தெரிஞ்ச அறிவுஜீவிகளிலும் உண்டுங்கிறதைப் புரிய வெச்சுது என்னோட இந்தப் பதிவு!

கருத்துக்கு எதிர்க் கருத்து சொல்லலாம்; கடுமையாவும் சொல்லலாம். ரோஷ்மா போல ‘முட்டாள்’னுகூடச் சொல்லலாம். தப்பில்லை. அது கொஞ்சம் கடுமையான விமர்சனம். அவ்வளவுதான்! ஆனா, மட்டரகமான வார்த்தைகளைப் போடுறது எந்த விதத்தில் எதிர்ப்பாகும்னு புரியலை.

ஸாரி! ரொம்ப வருத்தமா இருக்கு!////


******************************* 

இந்தப் பின்னூட்டத்தை எழுதிய கிருபாநந்தினி (க்ளிக் செய்யவும்) பதிவரும் எழுதுவதை நிறுத்திட்டார். 

இவரை துரத்தி துரத்தி மிரட்டியவர்களையும் காணோம்! இதுதான் தமிழ்ப் பதிவுலகம்! :-)))


1 comment:

நாடோடி said...

வருண் உங்களுடைய கருத்துடன் முழுமையாக ஒத்துபோகிறேன். ஒரு பெண் பதிவருக்கு ஆதரவாக எழுதிய‌ எனக்கு கொடுத்த தொல்லைகள் கொஞ்சம் அல்ல இந்த இணைய சண்டியர்கள்.. :)

அந்த பெண் பதிவரும் இப்போது எழுதுவது இல்லை..