Friday, January 24, 2014

ருசிகர சினிமாச் செய்திகள்!

சத்யராஜ் ஹீரோவா நடிச்சு, கலவரம்னு ஒரு படம் ரிலீஸ் ஆகி இருக்குபோல. இதென்ன "டப்" படமா என்னனு தெரியலை. பிஹைண்ட் வுட்ஸ் (Behindwoods),  சைஃபை (sify, இப்படித்தான் நான் தமிழ்ல சொல்றது), rediff மற்றும் வலையுலகில் ஒரு பயகூட இதுக்கு விமர்சனம்னு என்ன எழவையும் எழுதக்காணோம். ஹிந்துல மட்டும் ஏதோ வந்தது. ஏன் இப்படி ஒரு படத்தை ஒரு மனதா எல்லோரும் புறக்கணிக்கிறாங்கனு தெரியலை.

விஸ்வரூபம் படம் ரிலீஸ் ஆகும்போது, பேர்ரி ஆஸ்பான், அந்தப்படத்தை தொடர்ந்து பத்துத்தர பார்த்து ரசித்ததாவும், அவர் குடும்பமே வந்து பார்த்து மூக்கில் விரலை வைத்து ஆச்சர்யமாப் பார்த்து கமலை வானளாவ புகழ்ந்ததாகவும் கமலே சொல்லாமல் சொல்லி விஸ்வரூபத்தை இஷ்டத்துக்கு ப்ரமோட் பண்ணினார்.அதன் பிறகு ஆஸ்பான் இவரை வைத்து படம் தயாரிக்கப் போவதாகவும் பல செய்திகள் வந்தன.அது மாதிரி எதுவும் நடக்கிறதா எதுவும் தெரியலை. அதுக்குள்ள கமலுக்கும் ஆஸ்பானுக்கும் கருத்து வேறுபாடு வந்து ப்ராஜெக்ட் நின்றுச்சா என்ன?

ரஜினியின் மகள் சவுந்தர்யா, அப்பாவை வைத்து பொம்மைப்படம் ஒண்ணு (அதான்ப்பா கோச்சடையான்) எடுக்கிறாரு எடுக்கிறாரு எடுத்துக்கிட்டே இருக்காரு. சங்கர், எந்திரன், சிவாஜி எடுத்தபோது இழுத்த இழுவையைவிட பல மடங்கு இழுக்கிறார். கடைசியில் ஆடியோ வெளியே வரப்போதாம். வந்தால்த்தான்/வந்த பிறகுதான் நான் அதை நம்புவேன். இதெல்லாம் ரஜினிக்குத் தேவையா? மகள்னா அன்பா இருக்க வேண்டியதுதான். எதுக்கு இதுபோல் ஒரு ப்ராஜெக்ட் செய்ய அனுமதிக்கனும்? அப்படியே அவரிடம் திறமை இருந்தால், இளநடிகர்களை வச்சு ஏதாவது சின்ன ப்ராஜெக்ட் பண்ணி தன் இயக்கத்திறமை வலிமைப்படுத்தாமல் ஏன்ப்பா இப்படி?

பொங்கலுக்கு ஜில்லாவும், வீரமும் மோதியது. அதென்னனு தெரியவில்லை இணையதள மீடியா மற்றும் சின்னத்திரை மீடியா எல்லாருமே இந்த இரு படங்களின் வெற்றி, விமர்சனம் பற்றி ரொம்பவே அடக்கி வாசிக்கிறாங்க. ரெண்டு படமுமே வெற்றி! ரெண்டுமே சுமார்தான்! ரெண்டுமே பாக்ஸ் ஆஃபிஸ் ல பக்கத்தில் பக்கதில் நிக்கிதுனு ஒரேயடியா யார் வெற்றி பெற்றார்கள்னு சொல்ல மறுக்கிறார்கள். இது சினிமா வரலாற்றில் ஒரு புதுமையான நிலை! I have never seen any such a "tie" in any box office war between two big stars, let it be Sivaji vs MGR or Rajni vs Kamal!

No comments: