Wednesday, November 14, 2012

துப்பாக்கியின் உண்மை நிலவரம்!

எனக்கு எவன் என்ன சூனியம் வச்சான்னு தெரியலை, வர வர விஜய் படம் நல்லாயிருந்தாலும் அவரும் நல்லா நடிச்சாலும் விஜயை ரசிக்க முடியாமல் சுத்தமாக அவரைப் பிடிக்காமல்ப் போயிடுத்து. ஒரு காலத்தில் விஜயை  ரொம்பவே ரசிக்க முடிந்ததென்னவோ உண்மைதான். ஆனால் இப்போ அவர் படம் நெசம்மாவே ஹிட் ஆனாலும், "சரி இப்போ அதனாலென்ன?" னு விதண்டாவாதம் பண்ணத்தான் தோனுது. நான் அஜீத் ரசிகரோ, விக்ரம் ரசிகரோ, சூர்யா ரசிகரோ இல்லை! ரஜினி ரசிகர்னு வேணா சொல்லலாம்.  ஏன் இப்படி அநியாயமாக ஒரு நடிகரைப் பிடிக்காமல்ப் போகுது எனக்கு? ஏன் இப்படி அனாவிசயமான வெறுப்பு விஜய் மேலே? னு யோசிச்சுப் பார்த்தால் ஓரளவுக்கு ஒரு மாதிரியான பதில் கெடைக்கத்தான் செய்யுது. அதை வெளியில் சொன்னால் இன்னும் பலருடைய வெறுப்புக்கு ஆளாக வேண்டிவரும்..அதனால் அதை அப்படியே விட்டுப்புட்டு துப்பாக்கியை கவனிப்போம்.

சிகரெட் புகைத்தால்த்தான் உடலுக்கு தீங்கானது சுருட்டு பரவாயில்லைனு சொல்லுதா நம்ம விசய்?

படம் வெளி வரப்போற நேரத்திலே இந்த கோபிநாத் வேற துப்பாக்கி விஜயைக்கூட்டி வந்து வச்சுக்கிட்டு கேள்வினு எதையோ கேட்டு.. பதில்னு இவரு எதையோ சொல்லி ஒரே போர்ப்பா..

சரி, துப்பாக்கி வெளிவந்துவிட்டது! விஜயை இவ்ளோ பிடிக்காத நான் அவர் படத்தை 10 டாலர் கொடுத்து தியேட்டர்ல போயிப் பார்ப்பேனா? சாண்ஸே இல்லை! இந்தப் படத்துக்கு போட்டி எதுவும் பெருசாக் கெடையாது. போடா போடி எல்லாம் பேரே சரியில்லை! அதனால் "அன்னப்போஸ்ட்" டாக வந்ததால துப்பாக்கி வெற்றியடைய வாய்ப்பு அதிகம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஒருவேளை துப்பாக்கி சரியா வெடிக்காம படம் ஊத்திக்கிச்சுனா கமல் உடனே விஸ்வரூபத்தை வெளிக்கொண்டு வந்துவிட மாட்டாரா?

Anyway, துப்பாக்கியை பொறுத்தவரையில் இதுவரை படம்  பார்த்தவர்கள் விமர்சகர்கள் எல்லாருமே படம் நல்லா இருக்குனு சொல்றதை தவிர வேறெதுவும் இல்லை!!!  விஜயைப் பிடிக்காதவர்களும் ஒண்ணும் பெருசா இந்தப்படத்தைக் குறை சொல்லவில்லை. ஒரு சில இஸ்லாமிய சகோக்கள், எதுக்கெடுத்தாலும் தீவீரவாதினா எங்களையே தாக்குறாங்கனு வருத்தத்துடன் கோபமாகவும் இருக்காங்கபோல தெரியுது. மற்றபடி,  இது ஒரு வெற்றிப்படம், மிகப்பெரிய வெற்றிப்படம்! னுதான் எல்லாருமே சொல்றாங்க.


* பதிவுலகில், கேபிள் சங்கர்  வேற வழியே இல்லாமல் கஷ்டப்பட்டு பாராட்டி நல்லாயிருக்குனு எழுதி இருக்காரு. அவருக்கு விஜய்னா கொஞ்சம் பிடிக்காது போலனுதான் எனக்குத் தோனுது..

படத்தின் மைனஸ் என்று பார்த்தால் ஆங்காங்கே ஸ்பீட்ப்ரேக்கராய் வரும் பாடல்களும், படத்தின் நீளமும்தான். நீளத்திற்கு காரணம் முதல் பாதியில் வரும் காதல் காட்சியும், ஜெயராமை வைத்து காமெடி என்று நினைத்து வைத்த காட்சிகளும் தான். கிட்டத்தட்ட அந்த காட்சிகளில் தூக்கமே வர ஆரம்பித்துவிட்டது. குறிப்பாய் க்ளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில் ஹைஃஸ்பீடில் ஒரு மெலடி தேவையா? அதுவும் ஏற்கனவே கோவில் கேட்ட வெண்பனியே பாடல் ட்யூனில். லாஜிக்கலாய் நிறைய லூப் ஹோல்கள், க்ளைமாக்ஸ் டெம்ப்ளேட் சண்டைக்காட்சி, மோசமான EFX, ஆகியவை இருந்தாலும்,  வெறும் மசாலாவாய் ஒரு மாஸ் படத்தைக் கொடுக்காமல் வித்யாசமான விஜய்யையும், ஒரு சுவாரஸ்ய ஆக்‌ஷனையும் தந்திருக்கிற முருகதாஸுக்கு வாழ்த்துகள்.

* விஜய் ரசிகரான  உண்மைத் தமிழனும்  படம் நல்லாயிருக்குனு ஆஹா ஓஹோனு  சொல்றாரு..இவரு எல்லா விஜய் படத்தையும் இப்படித்தான் சொல்லுவாருனு இவரை கண்டுக்காம விட்டுடலாமா?..

கேப்டன் விஜய்யாகவும் பரபரப்பாக பம்பரம் ஆடியிருக்கிறார்.. தீவிரவாதி மருத்துவமனையில் இருந்து  தப்பித்து ஓடும்போது கூடவே இவரும் ஓடியபடியே போடும் சண்டைக் காட்சியில் விஜய்யின் ஸ்டைல் ரசிக்க வைக்கிறது..! தங்கைகளை கடத்தியிருக்கும் தளபதி வில்லனிடம் கையை கன்னத்தில் வைத்து சொடக்குப் போட்டுவிட்டு சண்டைக்கு வரும் காட்சியில் பிரிவியூ தியேட்டரே அதிர்ந்தது..! ஐ ஆம் வெயிட்டிங் என்ற காட்சியில் இத்தனை அழுத்தம்  இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.. இறுதியில் வில்லனிடம் தப்பித்து ஓடும் திட்டத்தோடு அவனை ஏத்திவிடும் விதமாக பேசும் பேச்சில் மாடுலேஷன் விஜய் ரசிகர்களுக்கு செமத்தியான தீனி..! அதுதான் நடக்கப் போகிறது என்று தெரிந்தாலும், அதையும் ரசிக்கும்படியாகவே கொடுத்திருக்கிறார் இயக்குநர்..!

* பிளாசபி வழக்கம்போலதான். அப்படினா? அப்படித்தான்..விமர்சனத்திலே படத்தை ரொம்ப குறை சொல்ல முடியலைனு இப்படி தனக்குத்தானே ஒரு பின்னூட்டத்தைப் போட்டு தீர்த்துக்கிடுச்சு போல பிளாசபி.. இவரு ஒரு விசஜ் ரஜிகர்னு நான் நெனச்சேன்..தப்புக்கணக்காயிடுச்சா?

துப்பாக்கி டிக்கெட் கிடைத்த கதையையே தனி பதிவாக போடலாம். கழுத, விஜய் படம்தானே சாவகாசமா டிக்கெட் எடுத்துக்கலாம்'ன்னு விட்டா அம்புட்டு திரையரங்குகளும் நிறைந்துவிட்டன. அதாவது நிறைந்த மாதிரி சிகப்பு பலகை போட்டு அவர்களே வெளியில் மும்மடங்கு விலையில் விற்கிறார்கள். சரி போய்த்தொலையட்டும் விட்டாச்சு. நேற்று காலை சும்மா ஒரு எட்டு போய் பார்த்திட்டு வருவோமே’ன்னு ராயபுரம் ஐ-ட்ரீம் திரையரங்கிற்கு சென்றேன். கொள்ளை கூட்டம். அங்கே ஒரு அப்பாவி நண்பர் இரண்டு டிக்கெட் எச்சா இருக்கு வேண்டுமா'ன்னு கேட்க, கபாலுன்னு கவ்விக்கிட்டு உள்ளே போயாச்சு.

அதென்னவோ தெரியல... என்ன மாயமோ புரியல... விசையை ஸ்க்ரீன்’ல காட்டினதுமே குபுக்குன்னு சிரிப்பு வந்திடுதுய்யா... நல்லவேள அம்புட்டு பயபுள்ளைகளும் விசிலடிச்சிக்கிட்டிருந்ததால எவனுக்கும் நான் சிரிச்சது கேக்கல...!

* நம்ம  ஆரூர் மூனா செந்தில் ஒரு  பெரிய விஜய் ரசிகர்னு நெனைக்கிறேன். படமும் நல்லா வந்துவிட்டதால் இதுதாண்டா சந்தர்ப்பம்னு.. முதல் விமர்சனம் ஒண்ணை ரொம்ப பாஸிட்டிவா கொடுத்து படத்தை மேலே தூக்கிவிட்ட பெருமை இவரைத்தான் சேரும்.

 விஜய் படத்தில் அழகாக இருக்கிறார். காஸ்ட்யூம் டிசைனர் மற்றும் ஒளிப்பதிவாளரின் உதவியுடன் ஜம்மென்று வருகிறார். இயல்பாக நடிக்கிறார். நடனம் மட்டும் சொல்ல வேண்டுமா என்ன. குறுந்தாடி பக்காவாக பொருந்துகிறது. இந்த ஒரு படத்தின் வெற்றியை நம்பி கண்டிப்பாக இவர் இன்னும் மூணு மொக்கைப் படங்களில் நடிக்கலாம்.

மத்தபடி  Sify, Behindwoods போன்றவர்கள் நல்ல பாஸிட்டிவ் விமர்சனம் கொடுத்து இருக்காங்க.

விமர்சனத்தில் விதிவிலக்குனு பார்த்தால் rediff (ரெட்டிஃப் ) பவித்ரா ஸ்ரீனிவாசன் மட்டும் "thuppakki is dull"னு சொல்லி எழுதிவிட்டு விஜய் ரசிகர்களிடம்  வாங்கிக்கட்டிக்கிட்டு இருக்கிறார். உலகமே பாராட்டும்போது ஒரு சிலர் இப்படி வித்தியாசமாக மாற்று விமர்சனம் எழுதுவதைப் பாராட்டனும்தான். ஒரு வேளை இந்தம்மா நம்ம "மூனா" விமர்சனத்தை பார்த்துப்புட்டு ரொம்ப எதிர்பார்த்துப் போயிட்டாரா என்னனு தெரியலை.

ஆக, உண்மை நிலவரப்படி துப்பாக்கி ஒரு வெற்றிப்படம்னு இப்போவே ஒத்துக்கிட்டே ஆக வேண்டிய சூழலுக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன்.  :(
நம்மளுக்கு விஜயை பிடிக்கிதோ இல்லையோ, அவர் அப்பாவை பிடிக்கிதோ இல்லையோ, உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் செய்யனும்!  அதனால் துப்பாக்கி ஒரு பெரிய வெற்றிப்படம்னு இப்போவே ஏற்றுக்கொள்வோம்.

என்ன பண்ணுறது? ஒண்ணு வேணாப் பண்ணலாம், விஜயை விட்டுப்புட்டு, நம்ம முருகதாஸ், ஹாரிஸ் ஜெயராஜ் இவங்களோட வெற்றிப்படம்னு சொல்லிட்டுப் போவோம்.  ஆமா, அந்த காஜல் அகர்வால் பத்தி எதுவும் சொல்லாம முடிச்சுட்டேன். அதான் இப்போ சொல்லியாச்சு இல்லை ? விடுப்பூ! She is not hot for me! :)

9 comments:

கார்த்திக் சரவணன் said...

அண்ணே, நம்ம விமர்சனம் கண்ணுல படலியா...

வருண் said...

வாங்க ஸ்கூல் பையன்!:) இனிமேல்தான் போயி வாசிக்கனும்ங்க. Sorry!

Jayadev Das said...

ஆஹா ஒரே பிளக்குல எல்லா முன்னணி பதிவர்கள் விமர்சனமும் படிச்சாச்சு.........ஹெ ...ஹெ .......ஹே ........ஹே ......ஹெ .....

Anonymous said...

Sarithan...! Billa-2 sema hit nu sonnavan thana neenka.. Piragu epdi intha padamellam unkalukku pidikkum Alith sorry Ajith rasikre..

வருண் said...

அருள்: நீங்க மொதல்ல, வன்னியர்கள் தலித்கள் மேல் காட்டிய காட்டுமிராண்டிட்தனத்தி கண்டிச்சு, கண்டனம் தெரிவிச்சு ஒரு பஹ்டிவைப் போடுங்க. அப்புறம் சிகரெட்டைப் பார்க்கலாம்!

Vee said...

// ஏன் இப்படி அநியாயமாக ஒரு நடிகரைப் பிடிக்காமல்ப் போகுது எனக்கு?

I too feel the same way.

SAMRAT Ashoka said...

I Too

suvanappiriyan said...

ஆஹா...எல்லா பதிவர்களின் விமரிசனத்தையும் ஒரே பதிவா கொடுத்தாச்சா...படத்துல கத்திரி வச்சு இன்னும் இரண்டு நாளில் வேறொரு ஃபார்மில் தரப் போறாராம் முருக தாஸ். இப்போ பார்தவங்க திரும்ப மறுபடியும் ஒரு தரம் பார்க்கணும். தியேட்டர் காரங்களுக்கு டபுள் கலெக்ஷன். :-)

vels-erode said...

அதென்னமோ, என்ன மாயமோ தெரியல!எனக்கும் இதே நிலைதான். எவ்வளவோ சூப்பரா இருந்தாலும், விஜய் பட்த்தை பார்க்க போலாம்னா கை,கால் எல்லாம் உதறுது.பழைய படங்களில் வாங்கிய அடியின் பாத்திப்பு என நினைக்கிறேன்.
அட....நான் இன்னும் நண்பன் படமே( இயக்கம் சங்கராக இருந்தாலும்) பாக்கலை....