Monday, September 17, 2012

சாருவுக்கும், ஜெயமோகனுக்கும் மறுபடியும் கருத்து வேறுபாடு?!

தமிழைக் காப்பாத்த வேண்டுமென்றே தமிழ்த் தொண்டு செய்ய வந்த மலையாளிதான் நம்ம திருவாளர் ஜெயமோகன் அவர்கள். சமீபத்தில் எதையாவது மேதாவித்தனமாகச் சொல்லி ஊருப்பயலுக  வாயில விழாதனால அவர் தளத்துக்கு ரொம்ப ஹிட்ஸ் குறைந்து அலக்ஸா ரேட்டிங்ல கீழ போயிடுச்சாம், பாவம்.

அதை இப்போச் சரிக்கட்ட தமிழர்களையும், தமிழ் சினிமாவில் உள்ள நகைச்சுவை குறைவையும், நகைச்சுவை இல்லாத தமிழர்களையும் ரொம்ப கவனமாக, அவர்கள் மனது புண்படுறமாதிரி விமர்சிச்சியிருக்காரு. 

தமிழந்தான் உணர்ச்சிவசப்படுபவர்களாச்சே!

அவர் தளத்துக்கு ஹிட்ஸ் அதிகமாயிடுச்சு!

வென்றுவிட்டார் ஜெயமோகன்!

மலையாளப் படங்களிலும், ஆங்கிலப்படங்ளிலும் வரும் நகைச்சுவைக் காட்சிகள்தான் அவரை சிரிக்க வைக்குதாம்.
* என்னுடைய மனதுக்குகந்த நகைச்சுவைக் காட்சிகளில் அனேகமாக எல்லாமே மலையாள சினிமா அல்லது ஆங்கில சினிமா சம்பந்தமானவை. மிகமிகக்குறைவாகவே நான் தமிழ் நகைச்சுவைக் காட்சிகளை ரசிக்கிறேன். என்னுடைய அவதானிப்பில் பொதுவாகத் தமிழ்நாட்டில் நகைச்சுவை உணர்ச்சி மிகமிகக் குறைவு.
* என் சொந்தப் புரிதலைவைத்து இந்தியாவிலேயே தமிழ்மக்கள்தான் நகைச்சுவையற்றவர்கள் என நான் மதிப்பிட்டிருக்கிறேன்.இது ஒரு பொது அவதானிப்பாகவே என் மனதில் இருந்தது. ஆனால் சினிமாவுக்குச் சென்றபின் அது உறுதிப்பட்டது.
 தமிழ்ப் படங்களில் வருகிற நகைச்சுவையை நகைச்சுவையே இல்லை என்கிறார், ஜெயமோகன். ரொம்ப நாளைக்கு முன்னால எம் ஜி ஆரையும், சிவாஜியையும் ரொம்ப கீழ்த்தரமா இவர் விமர்சிச்சி இருக்காரு. அது பெரிய பிரச்சினை ஆகி முடிந்தது. இவருக்கு பழைய தமிழ் சினிமாப்படங்கள் பத்தியோ, அவைகள் தரம் பத்தியோ  எந்த அளவுக்குத் தெரியும்னு தெரியவில்லை!

ஜெயமோகன் ஒரு தவறு செய்துவிட்டார்..

* மலையாளப் படங்களிலும், ஆங்கிலப் படங்களிலும் இவர் ரசித்த நகைச்சுவைக் காட்சிகள் மற்றும் இவர் ரசித்த நகைச்சுவைப் படங்களையும் ஒரு லிஸ்ட் போட்டுக் கொடுத்து இருக்கனும்!

* ஆனால் வேண்டுமென்றே அப்படிக் கொடுக்காமல், பொதுவாகச் சொல்வதுபோல் சொல்லிவிட்டு போய்விட்டார். அப்படி லிஸ்ட் கொடுத்திருந்தால் அதில் என்ன பிரச்சினையினா, இவரோட நகைச்சுவை ரசனை எள்வோ மட்டமானதுனு எல்லாருக்கும் தெரிஞ்சிரும் பாருங்க!

நம்ம சாருநிவேதிதா தமிழர்களில் நகைச்சுவை உணர்வு பத்தி என்ன சொல்றார்னு பார்ப்போம்!

சாரு தமிழர் நகைச்சுவை உணர்வைப் பத்திச் சொன்னது இது..

* 3) வெளியே வழக்கம் போல் புத்தக விழாவுக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு பொதுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. தமிழில் இல்லாதது எதுவுமே இல்லை; உலகில் தோன்றிய முதல் மனித இனமே தமிழ் இனம்தான் என்று ஒருவர் கரகர குரலில் பேசிக் கொண்டிருந்தார். பார்வையாளர்களும் உற்சாகமாகக் கைதட்டி மகிழ்ந்தனர். தமிழர்களுக்கு இருக்கும் நகைச்சுவை உணர்வுக்கு ஈடு இணையே இல்லை.
எனக்கு உணமையிலேயே புரியலை..சாரு, என்ன சொல்றாரு? ஜெயமோகன் சொல்றது சரினு சொல்றாரா? இல்லைனா தவறுனு சொல்றாரா?

நான் சாருவுடைய இந்த  எழுத்தை வாசிச்சுப்புட்டு நகைச்சுவையா இருக்குனு விழுந்து விழுந்து சிரிச்சேன். ஜெயமோகன் இதற்கு என்ன சொல்றாருனு தெரியலை! அதான் நான் சிரிச்சதுக்கு..இவனுக்கு எதுக்கு சிரிக்கிறதுனே தெரியலைனு சொன்னாலும் சொல்லுவார்? ஆமா, எல்லாமே அவருக்குதானே தெரியும்! அதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இல்லையே?? அதான், "எல்லாம் தெரிந்த மேதாவி ஜெயமோகன்" என்ற கருத்தில்!

"தமிழர்களிடம் மறைந்து இருக்கும் நகைச்சுவை உணர்வை அறியாமல் அறியாமையில் வாழ்கிறார் ஜெயமோகன்" னு  ஒரு உண்மையை நான் சொன்னால், அதை குதற்கம் என்று சொல்லும் மலையாளிகளை கட்டி அழும் இந்த வீணாப்போன தமிழுலகம்!

3 comments:

சுதா SJ said...

ஆமா இவிங்க ரெண்டு பேரும் அடங்கவே மாட்டாங்களா??? ஆவ்வ்....
செம காமெடி பீசுகள் ரெண்டும் :))))

வருண் said...

துஷ்!

ரொம்ப நாளா ஆளையே காணோம்? திடீர்னு ஆக்டிவ்வா ஆயிட்டீங்க! :)

நலம்தானே?

உங்களை மறுபடியும் ஆக்டிவாகப் பார்ப்பதில் மகிழ்ச்சி! :)

சுதா SJ said...

ரெம்ப நல்லா இருக்கேன் வருண் :))

இலங்கை போயிருந்தேன் அதனால்தான் வர முடிவில்லை ....
தேங்க்ஸ் வருண்